திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியீடு

Report Print Vijay Amburore in இந்தியா

மக்களவை தேர்தலில் திமுக உள்பட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்தார் மு.க ஸ்டாலின்.

2019ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தலானது தமிழகத்தில் ஏப்ரல் 18ம் திகதி நடைபெற உள்ளது. தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின், மக்களவை தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடம் தொகுதிகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதில்,

திமுக போட்டியிடும் 20 தொகுதிகள்: சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளகுறிச்சி (தனி), நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி , திருவெறும்பூர்.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்: திருவள்ளூர், விருதுநகர், சிவகங்கை, தேனி, புதுச்சேரி

மதிமுக: ஈரோடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: கோவை, மதுரை

இந்திய கம்யூனிஸ்ட்: திருப்பூர், நாகை

விடுதலை சிறுத்தைகள்: விழுப்புரம், சிதம்பரம்

கொங்கு மக்கள் தேசம்: நாமக்கல்

இந்திய ஜனநாயக கட்சி: பெரம்பலூர்

மேலும், திமுக வேட்பாளர் பட்டியல் மார்ச் 17ம் தேதி அறிவிக்கப்படும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers