விஸ்வரூபமெடுக்கும் பொள்ளாச்சி விவகாரம்: சிபிசிஐடிக்கு குவியும் புகார்கள்

Report Print Fathima Fathima in இந்தியா

பொள்ளாச்சி விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுவரையிலும் சிபிசிஐடி பொலிசாருக்கு 100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது.

பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படமெடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் ஆங்காங்கே கல்லூரி மாணவ- மாணவிகளின் போராட்டமும் வெடித்துள்ளது.

இந்த வழக்கில் தற்போது சிபிசிஐடி பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுதொடர்பில் 94884- 42993 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவித்துள்ள பொலிசார், பெயர்கள் மற்றும் பிற விபரங்கள் பாதுகாக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுவரையிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் அளித்துள்ள தகவல்களால் வழக்கில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம் என தெரிகிறது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நீக்கி புதிய அரசாணையை வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers