திரைப்படம் மூலம் ஆதாயம் தேடுகின்றதா பாஜக…! தேர்தல் நடத்தை விதிமுறைகள்…?

Report Print Abisha in இந்தியா

தேர்தல் நடைத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் துவங்கியதும், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படம் வெளியிடப்படுவது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்தியாவில் நாடாளுமன்ற தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் அரசியல் தலைவா்களின் புகைப்படங்கள், சின்னங்கள் அகற்றப்பட்டு வருகின்றது.

இந்த தேர்தல் ஏழுகட்டமாக நடைபெறும் நிலையில் ஏப்ரல் 11ஆம் திகதி துவங்கி 19ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.கடந்த 10ம் தேதி தோ்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் அடுத்து நாடு முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

இதனால் அரசியல் கட்சித் தலைவா்களின் புகைப்படங்கள், இடம் பெற்றிருக்கும் விளம்பரங்கள், மற்றும் அரசு விளம்பரங்களில் இடம் பெற்றிருக்கும் பிரதமரின் புகைப்படம் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் PM Narendra Modi படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஒமங்குமார் இயக்கத்தில், இந்தி நடிகா் விவேக் ஓபராய் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை தோ்தல் நேரத்தில் வெளியிட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 11ம் தேதி மக்களவைத் தோ்தல் தொடங்கும் நிலையில் அடுத்த தினமே படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதற்கு எதிர்கட்சி இடையே பெரும் எதிர்புகள் கிளப்பி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...