இந்தியா – பாக்கிஸ்தான் எல்லை: இரவு நேரத்தை கடக்க அச்சப்படும் மக்கள்

Report Print Abisha in இந்தியா

இந்தியா பாகிஸ்தான் எல்லை நகரான அமிர்தசரஸில் நள்ளிரவு வேளையில் பெரும் இடிபோன்ற ஓசைகள் கேட்டதாக உள்ளூர் மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் எல்லையில் போர் மூழும் அபாயம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இரு நாடும் எப்போது மீண்டும் சண்டையை தொடங்கும் என்ற அச்சமும் கலக்கமும் எல்லை பகுதி மக்களை வாட்டி வதைக்கின்றது.

இந்நிலையில் எல்லை பகுதியான, அமிர்தசரஸில் நள்ளிரவு வேளையில் பெரும் இடிபோன்ற ஓசைகள் கேட்டதாக உள்ளூர் மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிர்வு காரணமாக சில வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் சிதறி விழுந்ததால் பாகிஸ்தான் விமானங்கள் குண்டு வீசியதாக வதந்திகள் பரவி உள்ளது.

மேலும், ஜெட் போர் விமானங்கள் கீழே பறந்து சென்றதாகவும், வானில் காதைப் பிளக்கும் அளவு ஓசையை எழுப்பிச் சென்றதாகவும் சமூகவலைதளங்களில் பதிவுகள் வெளியாகின. இந்த ஓசைகள் கிட்டத்தட்ட வெள்ளிக்கிழமை காலை 1 மணிக்கு கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பஞ்சாப் மாநில காவல்துறை அளித்த விளக்கத்தில், இந்திய ஜெட் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்