மகனை பிரிய மனமில்லாத தாய்.... உணவில் விஷம் வைத்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சோகம்!

Report Print Vijay Amburore in இந்தியா

புதுச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த ஞானவேலு என்பவர் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சீதாலட்சுமி (33) என்கிற மனைவியும், 3 மகன்களும் இருக்கின்றனர்.

இதில் மூத்த மகன் லோகேஷ் (15) மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் தாய் வீட்டிலும், மற்ற இரண்டு மகன்கள் பாட்டி வீட்டிலும் தங்கி வந்தனர்.

கடந்த சில நாட்களாகவே ஞானவேலுக்கும் அவருடைய சகோதரர்களுக்கும் இடையே சொத்து பிரச்சனை நடந்து வந்துள்ளது.

இதுதொடர்பாக சம்பவம் நடந்த அன்று ஞானவேலுக்கும் அவருடைய மனைவி சீதாலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சீதாலட்சுமி கணவன் தொழிலுக்கு சென்ற நேரம் பார்த்து, தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். தான் சென்ற பிறகு மகனை யாரும் சரிவர பார்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக உணவில் விஷம் வைத்து கொடுத்துள்ளார். அதன் பிறகு சீதாலட்சுமியும் சாப்பிட்டுவிட்டு மயங்கி தரையில் விழுந்துள்ளார்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவரும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்