தேர்தல் நடத்தை விதிமுறைகள்: தாமரை அழிக்கப்படுகின்றது- அப்போ உங்கள் கைகள் பத்திரம்…!

Report Print Abisha in இந்தியா

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோயிலில் வரையப்பட்ட தாமரை கோலத்தை அழிக்கப்படுகின்றது என்பது உடலில் இருக்கும் கையை காட்டினால் அதையும் வெட்டிவிடுவார்களா என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், கட்சி சார்ந்த சின்னங்கள் எங்கு இருந்தாலும் அதை அழிக்கும் பணிகளில்அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வரையப்பட்ட தாமரை கோலங்கள், அது பாஜகவின் சின்னமாக இருப்பதால் தேர்தல் விதிகளை காரணம் காட்டி அதிகாரிகள் சுண்ணாம்பு கொண்டு அழிக்க உத்தரவிட்டனர். இந்த சம்பவம் தமிழகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல இந்து மத அமைப்புகளும் தேர்தல் அதிகாரிகளின் செயலுக்கு எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் வெளியிட்டுள்ளஅறிக்கையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பொதுமக்களால் வரையப்பட்ட தாமரை கோலங்களை அழித்த அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறோம். கோலம் என்பது, மகாலட்சுமியின் ரூபமாக நம்பப்படுகிறது. இது பக்தி நோக்கத்தோடு வரையப்பட்டது. தேர்தல் நோக்கம் கொண்டது அல்ல.

நிலைமை இப்படியிருக்க, உடலில் கை உள்ளது. அதை காண்பித்தால் உடலில் இருந்து அகற்றி விடுவார்களா என்றும், தினமும் சூரியன் உதிக்கிறது. தேர்தல் சின்னம் என்று சூரியனை மறைத்து விட முடியுமா என்றும் கேள்விஎழுப்பி உள்ளார். மேலும், மக்கள் நம்பிக்கைகளை அதிகாரத்தின் பெயரால் அழிக்க முற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்ட கைகள் காங்கிரஸ் கட்சியின் சின்னம், மேலும் உதயசூரியன் திமுக-வின் சின்னம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்