பொள்ளாச்சி சம்பவம் அடங்குவதற்குள்ளே மீண்டும் ஒரு கொடூரம்: காதலிப்பதாக கூறி கல்லூரி மாணவிகளிடம் சீண்டல் செய்த நபர்

Report Print Vijay Amburore in இந்தியா

நாகையில் காதலிப்பதாக 5 கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதுபோன்று நாகையில் ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் சுந்தர் (23). இவர் அப்பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அங்கு வேலை செய்து வந்த பெண்ணுக்கும் இவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியதை அடுத்து, இருவரும் சேர்ந்து காரைக்கால் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்த சுந்தர், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.

மயக்கம் தெளிந்த எழுந்த அந்த பெண்ணிடம், வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், 294(B), 448, 354A, 354B ,506/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிஸார் சுந்தரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கல்லூரி மாணவிகள் 5 பேரை காதலிப்பதாக ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்