சீட் தராத விரக்தி... பாஜகவில் சேரும் முக்கிய தலைவர்கள்: அதிர்ச்சியில் மம்தா பானர்ஜீ

Report Print Vijay Amburore in இந்தியா

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியில் திருப்திகரமாக இல்லாததால், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து வருகின்றனர்.

மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டார்.

இதில் தற்போது பதவியில் இருக்கும் எம்.பி.க்கள் 10 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக பெண்கள் ஓட்டுகளை கவரும் வண்ணம் 41 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார். அதேசமயம் புதிதாக 18 பேருக்கு சீட் கொடுத்துள்ளார்.

இதனால் கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள் பலரும் பெரும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பாஜக, திரிணாமுல் கட்சியில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் விதமாக சீட் கொடுக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகின்றனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் முகல் ராய் பாஜகவில் சேர்ந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், தற்போது மேலும் சில தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசியிருக்கும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, "அடுத்து சில நாட்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏராளமான முக்கியத் தலைவர்கள் பாஜகவில் இணையப் போகிறார்கள். எங்கள் விளையாட்டு தொடங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்