மீண்டும் தேர்தலில் களமிறங்கும் நடிகை ரோஜா: எங்கு போட்டியிடுகிறார்?

Report Print Raju Raju in இந்தியா

ஆந்திர மாநில தேர்தலில் நகரி தொகுதியில் மீண்டும் நடிகை ரோஜா போட்டியிடவுள்ளார்.

இந்தியாவில் மக்களவை தேர்தலுடன் சில மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

அப்படி 175 இடங்களை கொண்ட ஆந்திர மாநில சட்டசபைக்கு ஏப்ரல் 11-ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுகிறது.

அம்மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் 175 இடங்களுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று வெளியிட்டார்.

இதில் அக்கட்சியை சேர்ந்த ரோஜாவுக்கு நகரி தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நகரி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக ரோஜா தான் உள்ளார்.

நடிகை ரோஜாவை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடிகை வாணி விஸ்நாத் போட்டியிடுவார் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், அது குறித்த எந்தவொரு தகவல் தற்போது வெளியாகவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்