வெளிநாட்டில் கண்முன்னே மது குடித்த மகளுக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை: வைரலாகும் வீடியோ!

Report Print Vijay Amburore in இந்தியா

அமெரிக்காவில் கண்முன்னே மதுகுடித்த மகளை பார்த்து அவருடைய பெற்றோர் அதிர்ச்சியடையும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சிறு வயதில் இருந்தே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வளர்ப்பார்கள். ஆனால் அந்த கட்டுப்பாடுகளை அவர்களுடைய குழந்தைகள் மீறும் போது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் பெரும் அதிர்ச்சியடைவார்கள்.

அந்த வரிசையில் மிஷா மாலிக் என்கிற இளம்பெண் ஒருவர் அமெரிக்காவில் தன்னுடைய பெற்றோருடன் உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அவருடைய பெற்றோரின் கண்முன்னே மது குடித்துள்ளார். இதனை பார்த்ததும் அவருடைய பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த வீடியோ காட்சியில், குடிக்க ஆரம்பிக்கும்போதே மிஷா மாலிக்கின் தாய் வேண்டாம் என மீண்டும் மீண்டும் கூறுகிறார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் மிஷா குடித்துவிடுவதை போல இடம்பெற்றுள்ளது.

மகளின் இந்த செயலால் ஆத்திரமடைந்த மிஷாவின் பெற்றோர் அமெரிக்காவில் இருந்து தன்னுடைய மகளை மீண்டும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்