செய்தித்தாள் படிக்கும் போது மாரடைப்பு... திடீரென உயிரிழந்த அதிமுக எம்.எல்.ஏ

Report Print Raju Raju in இந்தியா

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் (64) மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். அதிமுகவின் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான இவர் கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெறார்.

இந்நிலையில் இன்று காலை கனகராஜ் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். காலையில் அவர் செய்தித்தாள் வாசித்துக் கொண்டு இருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இதையடுத்து மருத்துவமனைக்கு செல்லும் முன்பே அவர் மரணம் அடைந்தார்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்