பெண்களை அடைவதற்காகவே கல்லூரியை நடத்தி வந்த நபர்... விடுதியில் ரகசிய கமெரா! பகீர் பின்னணி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தின் கன்னியாகுமரி அருகில் உள்ள ஜேக்கப் பாராமெடிக்கல் கல்லூரியில் ஆசிரியையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கல்லூரி நிறுவனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறைச்சகுளத்தில் ஜேக்கப் பாராமெடிக்கல் கல்லூரியை நடத்தி வருபவர் ரவி. இவர் இங்கு பணியில் உள்ள ஆசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாகவும் இவருக்கு ஒத்துழைக்காத ஆசிரியைகளை பணி நீக்கம் செய்து விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில் அங்கு பணிபுரிந்த ஆசிரியை ஒருவரிடம் தொடர்ச்சியாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ரவி சம்பவத்தன்று அவரது அலுவலக அறையில் வைத்து பலாத்கார முயற்சியில் இறங்கி உள்ளார்.

அவரிடம் இருந்து தப்பி வந்த ஆசிரியை நடந்த விவரத்தை மாணவிகளிடம் தெரிவித்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து மாணவிகளின் துணையுடன் அந்த ஆசிரியை ரவியின் அத்துமீறல்கள் குறித்து பொலிசில் புகார் அளித்தார். இதையடுத்து டிஎஸ்பி ஜவகர், மாணவிகளை அழைத்து நேரடியாக விசாரித்தார். அப்போது ரவி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ரவி நீண்ட நாட்களாக ஆசிரியைகளையும், மாணவிகளையும் தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தி வந்துள்ளார். மாணவிகள் விடுதியில் ரகசிய கமெராக்களை வைத்து படம் பிடித்து வந்ததாகவும் சில மாணவிகள் குற்றஞ்சாட்டினர்.

யாராவது கல்லூரியில் விசாரிக்க வந்தால் அவர்களிடம் கல்லூரியில் அப்படி ஒன்றும் நடக்க வில்லை என்று கூறி சமாளிப்பதற்கு என்றே நளினி, கலா என்ற இரண்டு பெண் ஊழியர்களை ரவி பணிக்கு அமர்த்தி இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ரவியையும் நளினி, கலா ஆகிய இரு ஊழியர்களையும் பொலிசார் கைது செய்தனர்.

ரவி பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதற்காகவே சொந்தமாக பாராமெடிக்கல் கல்லூரி நடத்தி வந்த அதிர்ச்சி தகவலும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுவரை 20 மாணவிகள் 5 ஆசிரியைகள், ரவியால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில் பொலிசார் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்