3 இராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை: சகவீரர் வெறிச்செயல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிஆர்எப் வீரர்கள் முகாமில் உள்ள இராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் 3 வீரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

உதம்பூர் அடுத்த பட்டல் பாலியா பகுதியில் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்களின் முகாம் உள்ளது.

அஜித்குமார் என்ற வீரருக்கும், சக வீரர்கள் சிலருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த அஜித்குமார், திடீரென துப்பாக்கியை எடுத்து சக வீரர்களை சுட்டுள்ளார்.

இதில் ராஜஸ்தானை சேர்ந்த ஜூன்ஜூனு, டெல்லியை சேர்ந்த யோகேந்தர் சர்மா, ரெவாரியை சேர்ந்த உமீத் சிங் ஆகிய மூன்று சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.

வீரர்களை சுட்டுக்கொலை செய்துவிட்டு, அஜித்குமாரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றதில், மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதா உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்