சுயநினைவின்றி கிடந்த சமீபத்தில் திருமணமான புதுப்பெண்... வெளியான அதிர்ச்சி பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

சமீபத்தில் திருமணமான புதுப்பெண் பாலத்திலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் Kendrapara மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தாருடன் புதுப்பெண்ணுக்கு சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த அவர் நேராக லூனா ஆற்றின் அருகில் வந்து ஆற்றின் பாலத்தின் மீது ஏறிநின்று பின்னர் கீழே குதித்தார்.

இதை பார்த்த அங்கிருந்த சிலர் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு வெளியில் எடுத்து வந்தனர்.

சுயநினைவின்றி இருந்த அவர் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்