என்னை மன்னித்துவிடுங்கள்... அப்பாவி ஆசிரியரை கொலை செய்துவிட்டேன்: உருக்கமான கடிதம் எழுதிய தீவிரவாதி!

Report Print Vijay Amburore in இந்தியா

அப்பாவி ஆசிரியை கொலை செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என அவருடைய குடும்பருக்கு மாவோயிஸ்ட் தீவிரவாதி கடிதம் எழுதியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் கத்ரோலியில் உள்ள ஜவஹர்லால் நேரு முனிசிபல் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் யோகேந்திர மெஷ்ராம். இவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் அவரது மனைவி கஸ்தூரிப தேவ்தேட்டை சந்திக்க கோரி தெஹ்சில் உள்ள Dholdongri பகுதிக்கு வருவார்.

அவரது மனைவி போதேஜாரி பகுதியில் உள்ள முதன்மை சுகாதார மையத்தில் ஒரு ஒப்பந்த செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த மார்ச் 10ம் திகதியன்று வழக்கம் போல தன்னுடைய மனைவியை சந்திப்பதற்காக சென்ற யோகேந்திர மெஷ்ராம், இரவு உணவிற்காக காய்கறி மற்றும் இறைச்சி வாங்க சந்தைக்கு சென்றுள்ளார்.

அங்கு மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த தீவிரவாதியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்தநிலையில் யோகேந்திர மெஷ்ராம் குடும்பத்திற்கு கடிதம் எழுதியிருக்கும் அந்த தீவிரவாதி, நான் செய்த கொலைக்காக கைகளை கூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எங்கள் உளவுத்துறையின் தவறால், அப்பாவி பள்ளி ஆசிரியை பொலிஸார் என நினைத்து சுட்டுகொன்றுவிட்டேன்.

இந்த கடினமான நேரத்தில் உங்களுடன் எங்களுடைய வருத்தத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். இந்த சம்பவத்தால் பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், சுகாதார துறை ஊழியர்கள் மற்றும் கடைக்காரர்கள் ஆகியோர் பயத்தில் இருக்க தேவையில்லை.

எங்களுடைய தவறால் இந்த சம்பவம் நடந்துவிட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்கிறோம். ஏழைகளை இலக்கு வைத்து தொந்தரவு செய்யும் ஊழல் அமைப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.

முதலாளித்துவம் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களை மட்டுமே இந்த அமைப்பு தூக்கி எறியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்