நிர்வாணபுகைப்படங்களை வைத்து மிரட்டி அழகிய இளம் பெண் செய்த அதிர்ச்சி செயல்! விசாரணையில் பகீர் தகவல்

Report Print Santhan in இந்தியா

கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் நிர்வாணப் புகைப்படங்களை வைத்து ரிசார்ட் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் Thirssur மாவட்டத்தின் Kodungalloor பகுதியைச் சேர்ந்தவர் Shameena. 27 வயதான இவரை பொலிசார் சமீபத்தில் அதிரடியாக கைது செய்தனர்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த மாதம் சமீனா மற்றும் அவரது நண்பர்கள் கோழிக்கூட்டின் Kakkadampoyil பகுதியில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் வாடைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

அப்போது Shameena அங்கிருந்த ஊரிமையாளர் ஒருவரிடம் நெருக்கமாக இருந்ததாகவும், அப்போது அவருடன் இருந்தது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை Shameena-வின் நண்பர்கள் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பின் அவர் மற்றும் அவரது நண்பர்கள் அந்த உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். முதலில் 40,000 ரூபாய் கேட்டுள்ளனர். அதை அவர் கொடுத்த பின்பு மீண்டும் அந்த 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரிசார்ட் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னரே பொலிசார் முதலில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

அதன் பின் இந்த சம்பவத்தில் சமீனாவும் ஈடுபட்டுள்ளார் என்பதை அறிந்து கைது செய்துள்ளனர்.

மேலும் இவர்கள் இது போன்று வேறு யாரையும் இது போன்று ஏமாற்றி பணம் பறித்துள்ளனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்