ஜெயலலிதா பாணியை பின்பற்றும் ஓபிஎஸ்-இபிஎஸ்! பெரிகுளம் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுகிறாரா?

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் முருகனுக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு இருந்து வருவதால், ஜெயலலிதா பாணியில் விரைவில் வேட்பாளரை மாற்ற முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் திகதி நடைபெறுகிறது.

பெரியகுளம் தொகுதியில் திமுக சார்பில் ராயப்பன்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் போட்டியிடுகிறார்.

இதைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் பெரியகுளம் தென்கரை அருகே உள்ள கல்லுப்பட்டி சேர்ந்தவர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோசியல் வெல்பர் ஆபீஸராகவும், கட்சியினருக்கு அறிமுகம் இல்லாதவராகவும், கட்சி பொறுப்பிலும் இல்லாதவராகவு, சாதாரண உறுப்பினராக மட்டும் இருந்து அரசு பணியில் ஈடுபட்டு வரும், முருகனை ஒபிஎஸ்சின் ஆதரவாளர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிந்துரையின் பேரில் ஓபிஎஸ் சீட் கொடுத்து இருக்கிறார் என்ற பேச்சு கட்சியினரிடையே பேசப்பட்டு வருகிறது.

கட்சிக்காக உழைத்தவர்கள் இருந்தும் கூட தொகுதி மக்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் அறிமுகமில்லாத புதுவேட்பாளரை ஓபிஎஸ் அறிவித்ததை கண்டு அதிமுக நிர்வாகிகள் அதிமுக தலைமைக்கு புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் ரவீந்திரன் மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற வேட்பாளர் லோகிராஜனை அறிமுகப்படுத்தப்பட்டனர்.

அப்போது பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் முருகன் கலந்து கொள்ளவில்லை.

இதனால் பெரியகுளம் தொகுதி வேட்பாளரான முருகனை அதிமுக தலைமை மாற்றம் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக-வில் இறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இது போன்று ஒரு சில சமயங்களில் தன்னுடைய வேட்பாளர்களை மாற்றியுள்ளார்.

அதே பாணியை ஓபிஎஸ்-இபிஎஸ் பின்பற்றலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...