தமிழகத்தில் எச்.ஐ.வி பாதித்த பெண்ணின் குழந்தைக்கு எச்.ஐ.வி இருக்கிறதா... வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை என்று டீன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரத்தம் ஏற்றப்பட்டது.

அப்போது அவருக்கு எச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. அதன் பின் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதனால் அந்த பெண்ணின் கருவில் இருந்த குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் திகதி அந்த பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

அப்போது குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது என கருதப்பட்டது. அதன் பின் குழந்தை பிறந்து 45 நாட்கள் ஆன நிலையில், குழந்தையின் இரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அந்த குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சாத்தூர் பெண் கூறும்போது, என் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இல்லை என்று டாக்டர்கள் கூறி உள்ளனர்.

இதனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

மதுரை அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறுகையில், சாத்தூர் பெண்ணின் குழந்தைக்கு நடத்தப்பட்ட முதல் கட்ட பரிசோதனையில் எய்ட்ஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது.

அந்த குழந்தையின் உடல் எடையும் தற்போது 3.2 கிலோ என்கிற அளவில் அதிகரித்து உள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers