மக்களவை தேர்தல்..சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபல நடிகர் போட்டி! முழுப்பட்டியல் எப்போது?

Report Print Santhan in இந்தியா

சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபல திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்காக ஒவ்வொரு தொகுதிகளின் வேட்பாளர்களை திமுக, அதிமுக மற்றும் தினகரனின் அமுமுக போன்ற காட்சிகள் அறிவித்துள்ளது.

வேட்பாளர்களுக்கான வாக்கு சேகரிப்புக்கான பிரச்சாரமும் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திண்டுக்கலில் போட்டியிட பிரபல திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சியினரின் வேட்பாளர் பட்டியல் 23-ஆம் திகதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி இந்த வேட்பாளர் பட்டியல்களில் சரி பாதி பெண் வேட்பாளர்கள் இருப்பார்கள் என சீமான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers