தேர்தலை தள்ளிவைக்கக்கோரி மனு! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Raju Raju in இந்தியா

மதுரையில் சித்திரைத் திருவிழா நடப்பதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில், மதுரையில் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடக்கவுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் திருவிழாவுக்கு கூடும் போது, தேர்தல் நடத்துவது வாக்குப்பதிவை பாதிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தேர்தலை தள்ளி வைக்க கோரி நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் தேர்தலை நிறுத்தமுடியாது எனவும், வாக்குப்பதிவை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதையடுத்து தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய 3 மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்று மதுரையில் வாக்குப்பதிவு இரவு 8 மணிவரை நீட்டிப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers