பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தால் நின்று போன திருமணங்கள்... அந்த ஊர் பெண் வேண்டாம் என கூறும் மக்கள்... அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தால் அந்த ஊரை சேர்ந்த பொண்களும், மாப்பிள்ளைகளும் திருமணத்துக்கு வேண்டாம் என்ற மனநிலைக்கு வெளியூர்க்காரர்கள் சிலர் வந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சியில் 200-க்கும் அதிகமான கல்லூரி மாணவிகளும், பெண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு மிரட்டி வீடியோ எடுக்கப்பட்டனர்.

இதை ஒரு கும்பல் செய்த நிலையில் இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் தான் இந்த கொடூரங்கள் அரங்கேறியுள்ளது. இந்த வழக்கில் மேலும் பலர் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பொள்ளாச்சி விவகாரம் குறித்த செய்தி தமிழகமெங்கும் தீயாக பரவியுள்ளது.

இதன் எதிரொலியாக பொள்ளாச்சியை சேர்ந்த பெண்களும், மாப்பிள்ளைகளும் திருமணத்துக்கு வேண்டாம் என்ற மனநிலைக்கு வெளியூர்க்காரர்கள் சிலர் வந்துவிட்டதாக தெரிகிறது.

மேலும் இச்சம்பவத்துக்கு பின்னர் சில குடும்பங்களில் திருமணங்கள் நின்று போன அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது.

ஒரு சிலர் செய்த பாவச்செயலுக்கு ஏற்கெனவே புண்ணாகிப் போயுள்ள பொள்ளாச்சி மக்களுக்குக் இது போன்ற தண்டனையை வெளியூர் மக்கள் கொடுப்பது சரியா என சமூக ஆர்வலர்கள் குமுறுகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers