பேரறிவாளன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக சென்னை புழல் சிறையில் உள்ளார் பேரறிவாளன்.

இந்த நிலையில் திடீரென அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரக தொற்று தொடர்பாகவும் பேரறிவாளனுக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது. லேசான நெஞ்சுவலி இருப்பதாக பேரறிவாளன் கூறியதை அடுத்து இதய சிகிச்சை பிரிவிலும் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்