கோடீஸ்வரராக முதலிடத்தில் கமல்ஹாசன் கட்சி வேட்பாளர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சியின் புதுச்சேரி வேட்பாளர் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

புதுச்சேரி மக்களவை தொகுதியில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கமும், எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் டாக்டர் நாராயணசாமியும், மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர் எம்ஏஎஸ் சுப்பிரமணியன் உட்பட, 7 பேர் நேற்று மனுதாக்கல் செய்தனர்.

இந்த வேட்பாளர்களில் 3 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எம்.ஏ.எஸ் சுப்பிரமணியன் முதலிடத்தில் உள்ளார்.

அவரது சொத்து மதிப்பு 12 கோடியே 72 லட்சம் ஆகும். அவரது மனைவிக்கு அசையா சொத்துகள் 13 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலும் உள்ளது.

அடுத்து, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திடம் அசையும் சொத்து 2.94 கோடியும், அவரது மனைவி சசிகலாவிடம் 2.55 கோடியும், வைத்திலிங்கத்திடம் அசையா சொத்துகள் 4.12 கோடியும், அவரது மனைவியிடம் 1.17 கோடி ரூபாயும் உள்ளது.

இதுபோல், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி மற்றும், அவரது மனைவி இருவரிடம் சேர்த்து மொத்தம் அசையும் சொத்து 3.17 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளது. மேலும், நாராயணசாமி பெயரில் 4.14 கோடி மதிப்புள்ள அசையாத சொத்து உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers