வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த காதலன்..சொந்த ஊர் திரும்பிய பின் காதலியின் ஆபாசபுகைப்படங்களை பரப்பியதன் பின்னணி

Report Print Santhan in இந்தியா

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நபர், இளம் பெண்ணின் ஆபாச புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பரப்பியதால், அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தின் கன்னியாகுமாரி மாவட்டம், பூதப்பாண்டி அடுத்த குறத்தியறை பகுதியைச் சேர்ந்தவர் நவீன்.

ஆட்டோ ஓட்டுனரான இருந்த நவீனின் ஆட்டோவில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அடிக்கடி பயணம் செய்துவந்ததாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவில் காதலாக மாறி, நெருங்கி பழகும் அளவிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் நவீன் குடும்ப சுழ்நிலை காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின் கடந்த சில மாதங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பிய நவீன், அந்த பெண்ணை பார்க்க சென்றுள்ளார்.

அப்போது அவருடன் பழக்கத்தில் இருந்த பெண், வேறொருவருடன் நெருங்கி பழகி வந்தது தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த நவீன், அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.

இதை தெரிந்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், நவீனை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers