அரசியல் சாக்கடை என்று தவறாக கூறிவிட்டார்கள்! நாடாளுமன்ற தேர்தல் குறித்து அறிவுரை கூறிய நடிகர் விஜய் சேதுபதி

Report Print Kabilan in இந்தியா

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் முதல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‘தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. ரசிகர்களும், பொதுமக்களும் அரசியலை விட்டு விலகக் கூடாது.

அரசியல் சாக்கடை என்று தவறாக சொல்லி விட்டார்கள். சமூக வலைதளங்களில் கருத்து சொல்வதோடு நிற்க வேண்டாம். நமக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றாலும் அதை தெரிவிப்பதற்கு தேர்தல் உள்ளது.

எனவே, அனைவரும் ஓட்டு போட்டு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிலிருந்து யாரும் விலகக் கூடாது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers