அவர் சட்டையை என்ன அடிக்கடி கூட இருக்கிறவங்களேயே மாத்துவாரு: கமலை விமர்சித்த நடிகர் ராதாரவி

Report Print Abisha in இந்தியா

நடிகர் ராதாரவி தற்போது திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சூழலில் கமலின் கடந்த கால பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தினமலர் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் விமர்சித்துள்ளார்.

திமுக ஒரு ஊழல் மூட்டை என்றும், ஸ்டாலின் சட்டையை கிழிச்சுட்டு வந்தாரு நான் சட்டையை மாத்திட்டு தான் வருவேன் என்று கூறிய கமல் பேச்சுக்கு, பதிலளிக்கும் விதமாக பேசிய ராதாரவி. கமல் என்ன சட்டையை மாத்திடே கூட வருவாரு, அவருக்கு என்ன அடிகடி கூட இருக்குறவங்களேயே மாத்துறவருதானே, சட்டை மாத்துறது பெரிய விஷயமா என்று விமர்சித்துள்ளார்.

தொடர்ந்துகூட்டணி குறித்த கேள்விக்கு, பிஜேபி-க்கும் அதிமுக கூட்டணி என்பது எப்போதும் தெரிந்ததுதான்.அது சந்தர்பவாத கூட்டணி என்று எல்லாம் கூற முடியாது. ஆனால் தேமுதிக குறித்து எதிர்பார்க்கவில்லை பிரேமலதா விஜயகாந்து இது குறித்து தெரிவிக்கையில் முதலில் தனித்து கூட போட்டியிடுவோம்ஆனால் தன்மானத்தை இழக்க மாட்டோம் என்று கூறினார். 7 தொகுதிகள் வழங்கினால் மட்டுமே கூட்டணி என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது 4 சீட்களுக்கே இப்படி போய் சேர்ந்து விடுவர்கள் என்று எதிர்பாக்கவில்லை. அது நிச்சயம் ஒரு சந்தர்பவாத கூட்டணிதான் என்று கூறினார்.

வாரிசுஅரசியல் குறித்த கேள்விக்கு உழைத்து கொண்டு வருகிறவன் அரசியல் செய்வதில் தவறில்லை என்றும்,தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்று கூறினார்.

தொடர்ந்து,திமுக வந்தால் ரவுடிதனமும் அதிகரிக்கும் என்ற பயம் உள்ளது என்ற கேள்விக்கு. கடந்த10 ஆண்டுகளில் கணக்கு செய்து பார்த்தால் கொத்து கொத்தாக பெண்களை பாலியல் வன்கொடுமைசெய்தது, தற்போதைய ஆட்சியில்தான் என்ற தெரிவித்துள்ளார்.

- Dina Malar

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers