சூடு பிடிக்கும் மக்களவை தேர்தல்: விருதுநகரில் போட்டியிடும் சீமானின் மைத்துனர்

Report Print Santhan in இந்தியா

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழியின் சகோதரர் அருண்மொழித்தேவன் விருதுநகரில் நாம் தமிழர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

நாம் தமிழர் கட்சிக்கும் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அக்கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

கயல்விழியின் சகோதரர் அருண்மொழித்தேவன் தற்போது விருதுநகரில் நாம் தமிழர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை உறுப்பினராக இருக்கிறேன். தமிழ் மீதான பற்றினாலேயே எனக்கு சீட் கிடைத்தது என அருள்மொழித்தேவன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers