என் கடைசி ஆசை இதுதான்: உயிரிழந்த பொலிஸ்.... சிக்கிய டைரி குறிப்பு

Report Print Vijay Amburore in இந்தியா

நீதிபதி வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற பொலிஸார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதி முரளிதரன் வீட்டில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல்படையை சேர்ந்த சரவணன் (29) என்பவர் கடந்த 20ம் திகதி மாலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து வேகமாக மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், தோட்டா தலையின் வழியே ஊடுருவி சென்றுள்ளதால் அபாய கட்டத்தில் இருப்பதாக கூறியிருந்தனர்.

இதற்கிடையில் அவர் கைப்பட எழுதிய கடிதத்தையும் பொலிஸார் கண்டறிந்தனர். அந்த கடிதத்தில், 'எனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல. எனக்கு வாழப்பிடிக்கவில்லை. பிரதிபா, செல்வா, ருத்ரன் ஆகியோரை நல்லா படிக்க வைங்க. அம்மா, அப்பா என்ன மன்னிச்சிடுங்க. நான் இறந்ததும் எனது காக்கி உடையைக் கழற்றாமல் அப்படியே புதையுங்கள், அல்லது எரியுங்கள்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers