பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் எனக் கூறி குடும்பத்தையே கொடூரமாக தாக்கிய கும்பல்! அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் இஸ்லாமிய குடும்பத்தினரை, ரவுடி கும்பல் ஒன்று பாகிஸ்தானுக்கு செல்லுமாறு கொடூரமாக அடித்து உதைத்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள போண்ட்ஸி பகுதியில் நான்கு இஸ்லாமிய இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 35க்கும் மேற்பட்ட நபர்கள் அங்கு நுழைந்துள்ளனர்.

அவர்கள் கையில் வைத்திருந்த ஹாக்கி மட்டைகள், இரும்பு கம்பிகள், உருட்டைக் கட்டைகளைக் கொண்டு அங்கிருந்த அனைவரையும் மோசமாக தாக்கினர்.

தாக்கப்பட்டவர்களில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் இருந்துள்ளனர். அந்த கும்பல் வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் கொடூரமாக தாக்கியது.

அப்போது, அவர்களை கிரிக்கெட் விளையாடக் கூடாது என்றும், பாகிஸ்தானுக்கு செல்லுமாறும் அந்த கும்பல் கூறியபடி அடித்து உதைத்தது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers