எனது சாவுக்கு மனைவியும், மகளும் தான் காரணம்: கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நபர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொலிசார் அடித்ததால் மனமுடைந்த காவலர் டைரியில் காரணத்தை எழுதிவைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் ராமலிங்கம் - விஜயரூபா ஆகிய இருவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

விஜயரூபா அஞ்சுகிராமம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பில் கலெக்டராகப் பணிபுரிந்து வருகிறார்.

தனது மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காத காரணத்தால் ராமலிங்கம் அடிக்கடி பிரச்சனை செய்துள்ளார். தொடர்ந்து பிரச்சனை நிலவி வந்த காரணத்தால் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார் ராமலிங்கம்.

இந்நிலையில் தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு வீட்டுக்கு சென்ற ராமலிங்கம், அங்கு பிரச்சனை செய்ததையடுத்து மனைவி விஜயரூபா பொலிசில் புகார் அளித்ததையடுத்து, காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட ராமலிங்கத்தை பொலிசார் அடித்து, எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த ராமலிங்கம், பொலிசார் தாக்கியதால் தனக்கு வாழப்பிடிக்கவில்லை எனவும் தனது சாவிற்கு மனைவியும் மகளும் காரணம் என டைரியில் எழுதிவைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில் ராமலிங்கத்தின் நடத்தை சரியில்லாததால் அவரது மனைவி பிரிந்து வாழ்வதாகவும் பெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்றதாக அவரது மனைவி புகார் அளித்ததால் விசாரணை நடத்தியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers