போட்டியிட ஆள் இல்லை: 3 வேட்பாளர்களை கடனாக வாங்கும் முன்னாள் பிரதமரின் கட்சி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் கிடைக்காத நிலையில் காங்கிரசிடம் இருந்து 3 வேட்பாளர்களை கடனாக வாங்க உள்ளனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலிலும் இக்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

அதில் உடுப்பி- சிக்மகளூரு, உத்தரகன்னடா மற்றும் பெங்களூரு வடக்கு ஆகிய 3 தொகுதிகளும் மத சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விசேடம் என்னவென்றால் இந்த தொகுதிகளில் பா.ஜனதாவை எதிர்த்து போட்டியிட மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் வேட்பாளர்கள் இல்லை.

எனவே 3 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வேட்பாளர்களை கடன் வாங்க மதசார்பற்ற ஜனதா தளம் முடிவு செய்துள்ளது. உடுப்பி-சிக்மகளூர் தொகுதியில் பிரமோத் மத்வராஜும், பெங்களூரு வடக்கு தொகுதியில் பி.எல். சங்கரும், உத்தரகன்னடா தொகுதியில் பிரசாந்த் தேஷ்பாண்டே அல்லது நிவேதித் ஆல்வா போட்டியிட உள்ளனர்.

அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. தேவேகவுடா,

காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணு கோபால் மற்றும் கர்நாடக மாநில தலைவர் தினேஷ், குண்டுராவ் ஆகியோருடன் தொடர்ந்து பேசிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. தேவேகவுடா, இந்தியாவின் 11-வது பிரதமராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்