நாடாளுமன்ற தேர்தல்... மிகவும் பணக்கார வேட்பாளர் இவர் தான்: சுவாரஸ்ய தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.895 கோடி என தெரியவந்துள்ளது.

தெலுங்கானாவின் சிவெல்லா பகுதியில் போட்டியிடும் இவர், சமீபத்தில் வேட்பு மனுவுடன் சொத்து விவரம் குறித்த அறிக்கையையும் சமர்ப்பித்திருந்தார்.

அதில், அவரது சொத்து மதிப்பு ரூ. 895 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.223 கோடி அசையும் சொத்துக்கள்.

அப்போலோ மருத்துவமனையின் பங்குதாரரான மனைவி சங்கீதா ரெட்டி பெயரில் ரூ.613 கோடி உள்ளது. மகன்கள் பெயரில் ரூ.20 கோடி உள்ளது என தெரிய வந்துள்ளது.

மேலும் ரெட்டி மற்றும் அவரது மனைவி பெயரில் ரூ.36 கோடியில் அசையா சொத்துக்கள் உள்ளன. இதேபோல் மனைவியின் பெயரில் ரூ.1.81 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன.

இருப்பினும் இவர்களிடத்தில் சொந்த கார், பைக் என எந்த வாகனமும் இல்லை என்பது சுவாரஸ்யமான தகவல் ஆகும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்