அதிவேகத்தில் வந்து மோதிய வாகனம்... அடித்து தூக்கிவீசப்பட்ட இளம்பெண்: பதறவைக்கும் வீடியோ காட்சி!

Report Print Vijay Amburore in இந்தியா

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற இளம்பெண் அடித்து தூக்கி வீசப்படும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

நாகர்கோவில் அருகேயுள்ள மேலமணக்குடி பகுதியை சேர்ந்தவர் மேரி ஜெனிபர்(31). இவர் நேற்று தன்னுடைய இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார்.

பருத்திவிளை அருகே சாலையை கடக்க முற்பட்டபோது, எதிரில் ஒரு இருசக்கர வாகனம் வேகமாக வருவதை பார்த்த மேரி, பயத்தில் நடுரோட்டிலே வாகனத்தை நிறுத்திவிட்டார்.

ஆனால் எதிரில் வந்த இளைஞரின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் மோதியது. இதனை பார்த்து பதறிப்போன பொதுமக்கள், உடனடியாக காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியானதை அடுத்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers