கழிவறைக்குள் சென்று வெகுநேரமாக வெளியில் வராமல் இருந்த இளம்பெண்: கதவை உடைத்த போது காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் இளம்பெண் கழிவறைக்குள் சென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் அருகே உள்ள திருமலைபாளையத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி பரிமளா (27).

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று பரிமளா தனது குழந்தைகளை அடித்து உள்ளார். இதனை ரங்கநாதன் கண்டித்து திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பரிமளா மனவேதனை அடைந்தார். பின்னர் தனது வீட்டுக்கு எதிரே இருந்த கழிவறைக்கு சென்ற பரிமளா அங்கு தனது சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் கழிவறைக்கு சென்று விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த போது பரிமளா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து பொலிசுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு அந்த பொலிசார் பரிமளா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers