வெளிநாட்டிலிருந்து வந்த பெண் உட்பட 3 பேர் பலியான சோகம்... உயிருக்கு போராடும் சிறுவனுக்கு தமிழர் செய்த உதவி...குவியும் பாராட்டுகள்

Report Print Raju Raju in இந்தியா

மலேசியாவிலிருந்து தமிழகம் வந்த இடத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த சிறுவனுக்கு காவலர் செய்துவரும் உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோலாலம்பூரைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன். இவரது மனைவி ஈஸ்வரி தனது 5 குழந்தைகளுடன் தமிழகத்தின் பழநியில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.

வாடகை காரில் இவர்கள் சாலை சென்று கொண்டிருந்த போது டிரைவர் பாலகிருஷ்ணனின் கட்டுப்பட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஈஸ்வரி, அவரது மகன் சஞ்சய், டிரைவர் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த சிறுவன் பழனி உயிருக்கு ஆபத்தான நிலையில் பழநி அரசு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

காரில் பயணம் செய்த குழந்தைகள் சரவணன், சங்கவி, மஞ்சுளா, கைடு ராஜேஷ் ஆகியோர் சிறு காயத்துடன் தப்பினர்.

மருத்துவமனையில் இருந்த சிறுவனின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவரை பழநி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் சாந்து ஆகியோர் உயர் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பழனியை கவனித்து வரும் ரஞ்சித் சிகிச்சைக்காக தனது சொந்தப் பணம் ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்து தனது மனிதாபிமானத்தை காட்டியுள்ளார்.

ரஞ்சித்தின் இந்த மனிதநேய செயல் குறித்து அறிந்த பழநி மக்கள் அவரை மனதார பாராட்டி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers