திடீரென மாயமான மணமகன்: கடைசி நேரத்தில் நின்று போன திருமணம்!

Report Print Vijay Amburore in இந்தியா

கடலூர் மாவட்டத்தில் பத்திரிக்கை கொடுக்க சென்ற மணமகன் மாயமானதால் திருமணம் நடைபெறாமல் தடைபட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரமணி என்பவரது மகன் விவேக் (29). எம்.ஏ பட்டதாரியான இவருக்கும், பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

திருமணத்திற்கான வேலைகளில் இருவீட்டாரும் மும்மரமாக இறங்கியிருந்தனர். கடந்த 21ம் திகதி, பக்கத்து கிரமத்தை சேர்ந்த தோழி ஒருவருக்கு பத்திரிக்கை வைத்துவிட்டு வருவதாக கூறி, வீட்டிலிருந்து விவேக் கிளம்பியுள்ளார்.

ஆனால் அன்று முதல் வீடு திரும்பவில்லை. இதனால் நேற்று நடைபெறவிருந்த திருமணம் தடை பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வீரமணி பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், மாயமான விவேக்கை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்