மெழுகை உருக்கி மாணவன் கையில் ஊற்றி தண்டித்த இளம் ஆசிரியை: அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மாணவன் கையில் மெழுகை ஊற்றி சூடுவைத்த ஆசிரியையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் அருகே தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது.

இங்கு நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனின் பெற்றோர் அப்பள்ளியின் ஆசிரியையும், தாளாளரின் மகளுமான ரம்யா மீது பொலிசில் புகார் கொடுத்தனர்.

இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் நான்காம் வகுப்பு மாணவன் வீட்டுப்பாடத்தை தவறாக எழுதியதற்காக ஆசிரியை ரம்யா மெழுகுவர்த்தியை பற்றவைத்து உருகிய மெழுகை அவன் கையில் ஊற்றி சூடுவைத்தது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் ரம்யாவை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்