அமைச்சர்களை கலாய்த்த ஸ்டாலின்: சிரிப்பொலியில் அரங்கம்... வீடியோவுடன்

Report Print Abisha in இந்தியா

பிரச்சாரத்தில் தமிழக அமைச்சரை விஞ்ஞானி என்று கிண்டல் செய்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

நாடாளுமன்ற தேர்தலை அடுத்து இந்தியாவில் அனைத்து கட்சிகளும் தங்களின் பிரச்சாரத்தை தீவிரபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர், தற்போதைய அமைச்சர்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார் குறிப்பாக அமைச்சர் சீனிவாசனை அவர் மிகப்பெரிய விஞ்ஞானி ஏனெனில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனைக்கு அவர் தீர்வாக புயல்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழகத்திலும் கேரளத்திலும் வெள்ள பெருக்கு ஏற்பட காரணம் பிளாஸ்டிக் பைகள்தான் என்று தெரிவித்த விஞ்ஞானியும் அவர்தான் என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும் நரேந்திர மோடியின் பேரன் ராகுல் என்று அமைச்சர் சீனிவாசன் தெரிவித்ததை சுட்டிகாட்டி அதையும் விமர்சித்தார். இதன் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்