பொள்ளாச்சி பாலியல் விவகாரம்.. நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சம்மன்!

Report Print Kabilan in இந்தியா

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சி.பி.சி.ஐ.டி பொலிசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் வெளியிட்ட வீடியோ தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அத்துடன் பொள்ளாச்சி சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் செய்தி வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி பொலிசார், 25ஆம் திகதிக்குள் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜாராகும்படி சம்மன் அனுப்பினர்.

ஆனால், நக்கீரன் கோபால் ஆஜாராகவில்லை. இந்நிலையில், வருகிற 30ஆம் திகதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி பொலிசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்