பாஜக தலைவர்கள் பேசும்போதே எழுந்து சென்ற பொதுமக்கள்... படம்பிடித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் முயற்சி

Report Print Vijay Amburore in இந்தியா

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக கூட்டத்தின் போது பொதுமக்கள் எழுந்து சென்றதால், காலியாக கிடந்த நாற்காலிகளை படம்பிடிக்க முயன்ற பத்திரிக்கையாளர்களை அங்கிருந்த தொண்டர்கள் சிலர் தக்க முயன்றுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் , கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேச ஆரம்பிக்கும் போது சிலர் இருக்கைகளை விட்டு எழுந்து செல்ல ஆரம்பித்தனர்.

அதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேச ஆரம்பித்தார். அந்த சமயம் எஞ்சியிருந்த பொதுமக்கள் சிலரும் கிளம்பிவிட்டதால், நாற்காலிகள் அனைத்தும் காலியாக காணப்பட்டன.

இதனை அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் படம்பிடிக்க முயன்ற போது, தொண்டர்கள் சிலர் கெட்ட வார்த்தையால் திட்டி தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, மத்திய அமைச்சர் பாதியிலேயே தன்னுடைய உரையை முடித்துக்கொண்டு அவசரமாக அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்