கூடா நட்பு! எனக்கு மட்டும் தான் சொந்தம்: கணவரின் நண்பரை கொலை செய்த மனைவியின் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஈரோடு மாவட்டத்தில் கணவரின் நண்பரை கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ள நிலையி கொலைக்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிவக்குமார் என்பவர் கொங்கு தேச மறு மலர்ச்சி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி இணை செயலாளர் ஆவார்.

இவர், சுடுகாடு பகுதில் உடம்பில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார். இவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தியதில் சிவக்குமாருக்கு தவறான பழக்கம் இருப்பது தெரியவந்தது.

இதில் 29 வயதான செல்வி என்ற பெண் சிக்கினார். இந்த கொலைக்கான காரணம் குறித்து செல்வி அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது கணவர் செந்தில்குமாரின் நண்பர் சிவக்குமார். இதன் மூலம் எங்கள் இருவருக்கும் ஆரம்பத்தில் நட்பு ஏற்பட்டு காலப்போக்கில் அது கூடா நாட்பாக மாறியது.

நான் வேறு யாரும் இருக்ககூடாது என்றும் அவருக்கு மட்டுமே சொந்தம் என உரிமை கொண்டாடினார், இதனால் அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது.

இதனால், என்னுடன் பணியாற்றிய சிலருடன் சேர்ந்து சிவக்குமாரை கம்பியால் அடித்து சுடுகாட்டில் வீசிவிட்டோம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்