இயக்குநர் மகேந்திரனின் உடலை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா! வீடியோ

Report Print Kabilan in இந்தியா

இன்று காலமான பிரபல இயக்குநர் மகேந்திரனின் உடலைப் பார்த்ததும், இயக்குநர் பாரதிராஜா கதறி அழுதார்.

சென்னையில் காலாமான பிரபல இயக்குநர் மகேந்திரனின் உடல், அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திரையுலக பிரபலங்களில் நடிகை ரேவதி, இயக்குநர் சிம்புதேவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது இரங்கலை ட்விட்டரில் தெரிவித்தார். இயக்குநர் மணிரத்னம் தனது மனைவி சுஹாசினியுடன் அஞ்சலி செலுத்தினார்.

நடிகைகள் ராதிகா சரத்குமார், அர்ச்சனா, வரலட்சுமி, நடிகர்கள்மோகன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

இசைஞானி இளையராஜாவும் அஞ்சலி செலுத்திவிட்டு, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில், இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்குநர் மகேந்திரனின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மகேந்திரனின் உடலைப் பார்த்ததும் அவர் கதறி அழுதுவிட்டார். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. மகேந்திரனும், பாரதிராஜாவும் சமகாலத்தில் சிறந்த இயக்குநர்களாக விளங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்