காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: வென்றால் பெண்களுக்கு 33 சதவிகிதம் நிச்சயம்…?

Report Print Abisha in இந்தியா

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள்

 • மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கும் நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் புதிய தேர்வு திட்டம் அறிமுகம் செய்யப்படும்
 • 100 நாள் வேலை திட்டத்தை 150நாள் வேலை திட்டமாக உயர்த்தப்படும்
 • ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டங்களை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும்
 • வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.6000 வழங்கும் திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும்
 • அனைத்து மாநில விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும். மேலும், விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
 • அரசுத் துறையில் காலியாக உள்ள சுமார் 22 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்
 • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்
 • கடன்களை திருப்பி செலுத்த முடியாத விவசாயிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது, சிவில் வழக்கின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்
 • தற்போதைய ஜிஎஸ்டி மற்றும் ஆதார் சட்டம் மாற்றி அமைக்கப்படும்
 • அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு33 சதவிகிதம் இடம் ஒதுக்கீடு வழங்கப்படும்
 • ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள புகார் குறித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விசாரணை நடத்தப்படும்
 • அரசு பணி தேர்வுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் ரத்து செய்யப்படும்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்