தலைவா நான் தீக்குளிக்கவா என்று கேட்ட தொண்டர்! அதற்கும் அசராமல் பதில் கூறிய துரைமுருகன்

Report Print Kabilan in இந்தியா

வருமான வரித்துறை சோதனையை கண்டித்து, நான் தீக்குளிக்கவா என தி.மு.க பொருளாளர் துரைமுருகனிடம் தொண்டர் ஒருவர் வினவினார்.

தமிழகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக நடந்த வருமான வரிசோதனை முடிவுக்கு வந்துள்ளது.

இந்த சோதனை குறித்து துரைமுருகன் அளித்த பேட்டியில், ஒரு கட்சியின் மூத்த உறுப்பினர் வீட்டில் சோதனை நடத்தினால், கட்சியில் இருக்கும் மற்ற நபர்கள் பயந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள்.

எங்கள் பிரச்சாரம் இதனால் பாதித்து இருக்கிறது. மக்கள் எங்கள் பக்கம் இருப்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை. இந்த சோதனை மக்களின் மனநிலையில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என தெரிவித்தார்.

அப்போது அங்கிருந்த தி.மு.க தொண்டர் ஒருவர், தலைவா நான் தீ குளிக்கட்டுமா? சொல்லுங்க தலைவா, இப்பவே நான் தீ குளிக்க தயார் என்று துரைமுருகனை நோக்கி கேட்டார்.

இதனால் அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், துரைமுருகன் அதிர்ச்சியடையாமல் பொறுமையாக, ‘தீ எல்லாம் குளிக்காத, போய் டீ குடிச்சிட்டு வேலையை பாரு’ என்று பதிலளித்தார்.

அவரது இந்த பதிலைக் கேட்டு அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்து, கரகோஷம் எழுப்பினர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்