சிலுவை அணிந்திருந்தாரா பிரியங்கா காந்தி? மீண்டும் வைரலாகும் புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை!

Report Print Kabilan in இந்தியா

காங்கிரசின் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, கழுத்தில் சிலுவை அணிந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகளும், காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி கழுத்தில் சிலுவை அணிந்திருக்கும் புகைப்படத்தையும், ருத்ரக்ஷா மணியை அணிந்திருக்கும் புகைப்படத்தையும் இணைத்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த புகைப்படங்களில், சிலுவை அணிந்த புகைப்படம் கேரளாவில் எடுக்கப்பட்டதாகவும், ருத்ரக்ஷா மணி அணிந்த புகைப்படம் உத்தர பிரதேசத்தில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த புகைப்படங்கள் பா.ஜ.க பேஸ்புக் பக்கங்களில் பகிரப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அல்டஸ் நியூஸ் என்ற பத்திரிகை இந்த புகைப்படங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, பிரியங்கா காந்தி சிலுவை அணியவில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும், அவர் அணிந்திருந்த குறுக்கு நெக்லெஸ், சிலுவை போல் போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகை நிரூபித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

உண்மையில் 2017ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தி குறுக்கு நெக்லஸை மட்டுமே அணிந்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்