எடப்பாடி அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது! ஸ்டாலினின் பரபரப்பு அறிக்கை

Report Print Kabilan in இந்தியா

சென்னை-சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில், அ.தி.மு.க அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று தடை விதித்து தீர்ப்பளித்தது. இதனை 5 மாவட்ட விவசாயிகளும் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் இந்த தீர்ப்பு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘சென்னை-சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் அ.தி.மு.க அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். 8 வழிச்சாலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை தமிழக அரசு மதிக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், அ.தி.மு.க அரசு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யாது என்ற வாக்குறுதியை, வழக்கு போட்ட பா.ம.க பெற்றுத் தருமா? தவறினால், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறுமா? என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்