ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட 11 தம்பதி: எடுத்து கொண்ட ஆச்சரிய உறுதிமொழி என்ன தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தேர்தலில் வாக்களிப்பதாக உறுதி மொழியை எடுத்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரீல் ஆதிவாசி கல்யாண் சமதி என்ற அமைப்பின் சார்பில் 11 ஜோடிகளுக்கு ஒரு மேடையில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும் தம்பதியினர் திருமண மேடையிலேயே 7 உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வது அதிவாசி கல்யாண் சமதி அமைப்பின் மூலம் நடக்கும் திருமணத்தில் வழக்கமான ஒன்று தான்.

ஆனால் இந்த முறை நடந்த திருமணத்தின் போது 8வதாக ஒரு உறுதி மொழி சேர்க்கப்பட்டது.

அதன்படி தேர்தல்களில் கட்டாயம் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியும் சேர்க்கப்பட்டது. பின்னர் 11 தம்பதிகளும் தேர்தலில் வாக்களிப்பதாக உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

இந்தியாவில் வரும் 11ம் திகதி துவங்கி மே மாதம் 19 திகதி வரை 7 கட்டங்களாக மக்களைவை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்