ஆசை வார்த்தை கூறி என்னை கர்ப்பமாக்கிட்டாரு.... காலில் விழுந்து கதறி அழும் இளம்பெண்: வெளியான பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் ஆசை வார்த்தை கூறி தன்னை இளைஞர் கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிவிட்டதாக இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரேணுகாவுக்கு பெற்றோர் இல்லாத நிலையில் தனது சகோதரி வீட்டில் வசித்து வருகிறார்.

இவருக்கும் கார் ஓட்டுநர் ஜானகிராமனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறிய நிலையில் இரண்டாண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் ரேணுகா கடந்த மார்ச் 3ஆம் திகதி பொலிசில் ஒரு புகார் அளித்தார்.

அதில், திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஜானகிராமன் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார், இதனால் நான் கர்ப்பமாக உள்ளேன்.

பின்னர் என்னை திருமணம் செய்யுமாறு பல முறை வலியுறுத்தினேன்.

தன்னுடைய தாய் மற்றும் தங்கை என்னை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அவர் கூறினார் என ரேணுகா தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் மீது பொலிசார் இரண்டு மாதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், ஜானகிராமன் வீட்டு முன்பு தனது உறவினர்களுடன் சென்று, ரேணுகா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது அங்கு பொலிசார் வந்த நிலையில், ஜானகிராமனை தனக்கு திருமணம் செய்து வைத்து விடுங்கள் என்று கூறி அவர்கள் காலில் விழுந்து ரேணுகா கதறி அழுதார்.

இதையடுத்து தலைமறைவாக உள்ள ஜானகிராமனை பொலிசார் தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்