வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் விரட்டியடிக்கப்பட்ட கனிமொழி!

Report Print Vijay Amburore in இந்தியா

தூத்துக்குடியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலானது வரும் 18ம் திகதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர் கனிமொழி, வெள்ளியன்று இரவு கோவில்பட்டி அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒருவர், தூத்துக்குடி எம்.எல்.ஏ கீதாஜீவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த ஆடியோ குறித்து கேள்வி எழுப்பினார்.

இதனால் கனிமொழிக்கும், அந்த நபருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நிமிடங்களுக்கு இந்த சலசலப்பு நீடித்ததால், பிரசாரத்தை தொடர முடியாமல் கனிமொழி அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்