ஆற்றில் மிதந்த சிறுமியின் சடலம்... உடைந்த 12 எலும்புகள்: உடற்கூறு ஆய்வில் அம்பலமான கொடூரம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் 30 வயது நபரால் கடத்திச் சென்று துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில், கோவிலுக்கு சென்று திரும்பிய அந்த 8 வயது சிறுமியை தேவேந்திர கஷ்யப் என்ற 30 வயது நபர் கடத்திச் சென்றுள்ளார்.

பின்னர் கொல்லப்பட்ட நிலையில் ஆற்றில் மிதந்த சிறுமியின் சடலத்தை கிராம மக்கள் மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியின் உடற்கூறு ஆய்வறிக்கை தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதில், சிறுமியை கஷ்யப் மிருகத்தனமாக துன்புறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறுமியின் உடலில் மொத்தம் 12 எலும்புகள் உடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இயற்கைக்கு மாறாக சிறுமியை துன்புறுத்தியுள்ளதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த திங்களன்று குடியிருப்பின் அருகாமையில் உள்ள கோவிலுக்கு சிறுமி தனியாக சென்றுள்ளார். அங்கிருந்து குடியிருப்புக்கு திரும்பும் வழியில் மறைந்திருந்த காஷ்யப் சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.

கோவிலுக்கு சென்ற சிறுமியை காணவில்லை என பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

பொலிசாரின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், சிறுமியின் சடலம் ஆற்றில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தேவேந்திர கஷ்யப் என்ற 30 வயது நபர் சிக்கியதுடன், குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்